3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக உள்ள நிலையில் மற்றொரு தேர்தல் ஆணையரான அருன் கோயல் தீடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இதனை அடுத்து தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் பதவியில் உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் திடீரென பதவி விலகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார், “விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.