புதுடெல்லி: எதிர்வரும் நாட்களில், டெல்லி மாநில பாரதீய ஜனதாவில் பெரிய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இந்த மாற்றம் தள்ளிப்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். டெல்லி மாநிலத்தில், கட்சியின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் நடக்கவுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

டெல்லி மாநிலத்தில் பல ஆண்டுகளாக வலுவான கட்சிப் பதவிகளைப் பிடித்து வைத்திருக்கும் தலைவர்களின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியில் புது ரத்தம் பாய்ச்சுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் அமைப்பில் மாற்றம் செய்ய தலைமைக்கு எந்த தயக்கமும் இல்லை என கூறப்படுகிறது. தற்போதை நிலையில், மத்திய அமைச்சர்களான ஹர்ஷவர்தன் மற்றும் விஜய் கோயல் போன்றவர்கள் டெல்லி பாரதீய ஜனதாவின் முன்னணி முகங்களாக இருந்து வருகிறார்கள்.