டில்லி
அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி தனது நிதியாண்டு காலத்தை மாற்ற உத்தேசித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிவடையும்.
இந்திய அரசின் நிதியாண்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் தொடங்கி ஜூன் மாதம் முடிகிறது.
அரசின் நிதியாண்டுடன் ரிசர்வ் வங்கியின் நிதியாண்டையும் இணைக்க ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு சென்ற மாதம் பரிந்துரைத்தது .
அதையொட்டி ரிசர்வ் வங்கி தனது நிதியாண்டை மாற்ற அரசின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் தற்போதைய நிதி ஆண்டு ஜூன் மாதம் முடிவடைவதில் மாற்றம் ஏதும் இருக்காது.
அதன் பிறகு அடுத்த வருடம் மட்டும் நிதியாண்டு ஜூலை முதல் மார்ச் வரையும் அதன் பிறகு ஏப்ரல் – மார்ச் எனவும் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.