லண்டன்:
கம்பளிபூச்சிகளின் நுண் புழுக்கள் தேன் கூட்டில் உள்ள மெழுகுகளை சாப்பிடுகிறது என்றும், அவை பிளாஸ்டிக்கின் தன்மையை குறைக்க கூடியது என்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிளாஸ்டிக்கில் உள்ள பசை ரசாயனத்தை கம்பளிபூச்சிகளின் நுண்புழுக்கள் உடைக்க கூடியவை என்றும், தேன் கூட்டின் மெழுகு செரிமானத்திற்காக இதை அவைகள் உண்ணுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 மில்லியட் டன் பிளாஸ்டிக், பாலிதீன் தயாரிக்கப்படுகிறது.
ஷாப்பிங் பைகள், உணவு பொட்டலம் போன்றவைக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இவை மண்ணில் ம க்குவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும். அதே சமயம் கம்பளிபூச்சிகளின் புழுக்கள் இந்த பிளாஸ்டிக் பைகளில் ஒரு மணி நேரத்தில் ஓட்டை போட கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது.
இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பயோ கெமிஸ்ட் பவோலோ பாம்பெல்லி கூறுகையில், “ கம்பளிபூச்சிகளின் இத்தகைய கண்டுபிடிப்பு ஆரம்பகட்டம் தான். எந்த செயல்முறையில் புழுக்கள் இவ்வாறு செய்கின்றன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவு பிரச்னையை குறைக்க தொழில்நுட்ப ரீதியிலான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். இவரும் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த பெடரிகா பெர்டோச்சினி ஆகியோர் இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரியுள்ளனர்.
பிளாஸ்டிக்கை இயற்கையான முறையில் அழிக்க கூடிய இந்த ஆராய்ச்சியில் உள்ள ரசாயண ரகசியங்களை வேகமாக கண்டுபிடிக்க வேண்டும். புழுக்களில் உள்ள நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக்கை அழி க்கிறதா அல்லது இயற்கையாகவே புழுக்கள் அழிப்பில் ஈடுபடுகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
‘‘இந்த ரசாயண செயல்பாடு கண்டறியப்பட்டால் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளு க்கு தீர்வாக அமையும். பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது தொடர்பான ஆராய்ச்சி பாதையில் இதை வழிநடத்தி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கடல், ஆறு மற்றும் அனைத்து விதமான சுற்றுசூழலை பிர ச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த பயணம் தொடரும்’’ என்று பெர்டோச்சினி கூறினார்.