நெல்லை: ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகள் சென்னை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூரில் இருந்த சென்னை புறப்பட்ட ரயில், ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியது. இதில் சுமார் 800 பயணிகள் இருந்த நிலையில், மழை வெள்ளம் மற்றும் தாமிரபரணி வெள்ளத்தால், அவர்கள் ரயிலில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளத்தால் சூழப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ரயில் பணிகள் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று மத்திய பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களிலும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இநத் நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட ரயில் பயணிகள் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வெள்ளம் வடியாததால் தூத்துக்குடியில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கனமழை தொடர்ந்து பெய்துவந்ததால், சாலையில் உடைப்பு ஏற்பட்டு பயணிகளை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று மழை வெறித்திருப்பதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை மீட்கப்பட்ட பயணிகள் சுமார் 2 கி.மீ. நடந்தே அருகிலுள்ள கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, 6 பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. விரைவில் வாஞ்சி மணியாச்சி வந்திருக்கும் அனைத்து பயணிகளும் சிறப்பு ரயில் மூலம் சென்னை நோக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ரயில்வே சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.