திருச்சி:

திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு இந்திய விஞ்ஞாணி சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

 

அதில், ‘‘திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு இந்திய விஞ்ஞாணியும் நோபல் பரிசு பெற்றவருமான சர் சி.வி.ராமன் பெயரை சூட்ட வேண்டும். இந்தியா மற்றும் ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்றவர் சி.வி.ராமன்.

டாக்டர் அலீம்

 

அவர் திருச்சி திருவானைக்காவலில் 7.11.1888ம் ஆண்டு பிறந்தவர். இந்திய அரசின் பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

அவரது பெயர் எந்தி விமானநிலையத்துக்கும் இது வரை சூட்டவில்லை. தமிழகத்தில் கல்விக்கு மையமாக விளங்கும் திருச்சியில் உள்ள விமானநிலையத்துக்கு அவரது பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.