நெட்டிசன்:
பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு
தமிழ்நாடுஅரசுகவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A. புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004 தொடங்கி, 2008 – ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளும்; 2018 – ம் ஆண்டும் என, எட்டு ஆண்டுகள்; “மிஸ்டர் தமிழ்நாடு” பட்டம் வென்றவர்.
உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டிக்கான தகுதித் தேர்வில் (பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 29.08.2021 அன்று நடந்தது) புருசோத்தமன் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு காவல் துறையிலிருந்து உலக ஆணழகன் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் தலைமைக் காவலர் புருஷோத்தமன் என்பதே மகிழ்ச்சியான செய்தி.
2021 அக்டோபர் 1 முதல் 7- ம் தேதி வரை உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் உலக ஆணழகன் போட்டி நடக்கிறது. இதுநாள் வரையிலும், GPF (அ) சம்பளப் பணத்தில் சேமித்த பணத்தைக் கொண்டே ஆணழகன் போட்டிகளில்; திரு. புருசோத்தமன் கலந்து கொண்டுள்ளார். இப்போது நடக்கவுள்ளது, உலகளாவிய போட்டிக்களம் என்பதால்; பொருளாதார ரீதியில்; சிக்கலை எதிர்கொண்டு நிற்கிறார்.
உலக ஆணழகன் போட்டி நடக்கும் உஸ்பெஸ்கிஸ்தான் சென்று வர, விமான டிக்கட், தங்குமிடம், உணவு போன்ற அடிப்படைத் தேவைக்கு குறைந்தது; இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் என்பதே அதற்குக் காரணம். இதுபோன்ற செலவினங்களுக்கு (?!) ஒன்றிய அரசு எந்த நிதியுதவியும் அளிக்காது என்று ஒன்றிய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளதை இங்கே சுட்டிக் காட்டுதல் நல்லது!
இந்நிலையில்தான்
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் “அனைத்து பேட்ச் காவலர்களின் வாட்சப் குழு” வினர், இதுவரையில் ஒரு லட்சரூபாய் வரை வசூல் செய்து, திரு. புருசோத்தமனுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். “உலக ஆணழகனுக்கான சாம்பியன் விருது” பெற்ற பின், ‘புருசோத்தமன்’ களுக்கு; கோடிகளில் பரிசு – பணம் கொண்டு வந்து கொட்ட பலர் காத்திருக்கக் கூடும்; உதவி இப்போதுதானே தேவை; இப்போது கிட்டாத உதவி, பின் எப்போது கிட்டினால் என்ன; கிட்டாமல் போனால்தான் என்ன? ( கவனத்துக்கு கொண்டு வந்த நல்ல உள்ளங்கள் இருவருக்கும் நன்றி) (முகநூலில் : ந.பா.சேதுராமன் -04.09.2021) முக்கிய குறிப்பு :

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், தலைமைக் காவலர் புருசோத்தமன் அவர்களுக்கு, ரூ. 75 ஆயிரம் வழங்கி உதவியுள்ளார்; அவருக்கு எம் நன்றியும், வாழ்த்தும். (படம் இணைப்பு)