புதுடில்லி: வியாழக்கிழமை நடந்த 68வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களில் சென்னை பொறியாளர் குழு சிறந்த அணிவகுப்பு கான்டின்ஜென்ட் என்ற விருந்தை வென்றனர்.
சனிக்கிழமை அன்று வெளியிட்ட முடிவில், துணை-ராணுவப் படைகள் மற்றும் மற்ற துணை அணிவகுப்பு கான்டின்ஜென்ட்ஸ் பிரிவுகளில், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) கான்டின்ஜென்ட் சிறந்த அணிவகுப்பு கான்டின்ஜென்ட்டாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

 

காட்சிப் படம் பிரிவில், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையைச் சித்தரிக்கும் வகையில், யூனியன் அமைச்சகங்கள்/துறைகளிலிருந்து ஆறு காட்சிப் படங்கள் உட்பட மொத்தம் 23 காட்சிப் படங்கள் இந்த ஆண்டுக் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டன. அருணாசலப் பிரதேசத்தின் காட்சிப் படத்திற்கு முதல் பரிசு கிடைத்து. அதில் யாக் நடனத்தைச் சித்தரிக்கும் அருணாச்சல பிரதேச புத்த பழங்குடியினரின் மகாயான பிரிவினரின் மிகவும் பிரபலமான பான்டோமைம் இடம் பெற்றது. ரியாங்க் பழங்குடி ஆட்டத்தைக் குறிக்கும் ‘ஹோஜாகிரி’ நடனத்தின் அடிப்படையில் இருந்த திரிபுராவின் காட்சிப் படத்திற்கு இரண்டாம் இடமும், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பிடித்தன.

மகாராஷ்டிராவின் காட்சிப் படம், கவுரவிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர், லோக்மான்ய பால்கங்காதர் திலக் அவர்களின் 160 ஆவது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் காட்சிப் படம், பிரபலமான நாட்டுப்புற நடனமும், கோயில் திருவிழா கொண்டாட்டங்களில் ஒரு முக்கியமான நிகழ்வுமான “கரகாட்டம்” சித்தரிக்கப்பட்டிருந்தது.
யூனியன் அமைச்சகங்கள்/துறைகள் பிரிவில், “திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் முனைவோர்” அமைச்சகத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் ‘திறன் மேம்பாட்டு மூலம் இந்தியாவை மாற்றுவது’ என்ற கருத்தில் காட்சிப் படத்தைச் சித்தரித்து அமைச்சகத்தின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தியிருந்தனர். மத்திய பொதுப்பணித் துறை (CPWD) ‘பசுமை இந்தியா-சுத்தமான இந்தியா’ என்ற கருத்தைச் சித்தரிக்கும் வகையில் வழங்கிய காட்சிப் படம் நடுவர்களால் சிறப்பு பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டது.

பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்வுகளின் பிரிவில், கேந்திரிய வித்யாலயா, பிதம்புரா, தில்லி வழங்கிய நடனம், சிறந்த குழந்தைகளுக்கான நிகழ்வு என்ற விருதினைப் பெற்றது.

தென் மத்திய மண்டல கலாச்சார மையம், நாக்பூர், மத்தியப் பிரதேசத்தில் டின்டோரி மாவட்டத்தில் கோண்ட் பழங்குடியினரின் ஒரு பிரபலமான நடனமான ‘சைல கர்மா’ என்ற நடனத்திற்கு ஆறுதல் பரிசு பெற்றது.