74வது இந்திய குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பின்னர், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்களின் இந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் பாரதியார் எழுதிய ‘பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்’ என்ற இந்திய ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை வலியுறுத்தும் பாடல் ஒலிபரப்பப்பட்டது காண்போரின் கண்களை மட்டுமன்றி இதயங்களையும் மகிழ்வித்தது.