டெல்லி :

ந்தியாவின் மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு குறித்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது

இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக மறுமலர்ச்சி மையம் என்னும் ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியது.    அந்த ஆய்வின் முடிவுகளை அந்த அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை விவரங்கள் பின் வருமாறு :

மாணிக் சர்கார்

திரிபுராவின் முதல்வரான மாணிக் சர்க்கார் இந்தியாவின் மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக உள்ளார். அதே நேரத்தில் இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுஎன அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் வறுமையான முதலமைச்சர் ஆன திரிபுராவின் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்காரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு  ரூ. 26 லட்சம் ரூபாய் ஆகும்.   அவரை தொடர்ந்து  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் சொத்து மதிப்பு ரூ. 30 லட்சம் என்றும் இந்தியாவிலேயே 2வது வறுமையான முதலமைச்சர் மம்தா என்றும் அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

வசதியான  முதல்வராக முதல் இடத்தில் சந்திரபாபு நாயுடுவின்  சொத்து மதிப்பு ரூ.177 கோடி ஆகும்.   அடுத்ததாக வசதியான முதலமைச்சர் பட்டியலில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா கந்து ரூ. 129 கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்டு 2வது இடத்தில உள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங் ரூ. 48 கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்டு 3வது இடத்தில உள்ளார்.