பெங்களுரு:
பெங்களுரில் உள்ள தமிழர்களை விரட்டியடிப்போம் என்று கன்னட அமைப்புகள் பேசியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
காவிரி நீர் தொடர்பாக உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
‘‘ரத்தம் கொடுத்தாலும் கொடுப்போம் தண்ணீர் தரமாட்டோம்’’ என்று ஆவேசகுரலுடன் போராட்டம் நடத்திவருகின்றனர். பெங்களூருவில் தமிழக பஸ்கள் நிறுத்தியுள்ள மைசூர் சாட்டிலைட் பஸ் ஸ்டாண்டில்  போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் தமிழக பஸ் மீது ஏறி நின்றும், பஸ்கண்ணாடிகளில் காவிரி எங்களது என்றும் வாசங்களை எழுதினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மான்டியாவில் நீர் நிலை ஆதார மையத்தை கன்னட அமைப்பினர் சேதப்படுத்தி, அங்கிருந்த ஊழியர்களை அடித்து விரட்டினர்.
தமிழகத்தில் வசிக்கும் கன்னடர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் பெங்களூருவில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களை நாங்கள் அடித்து விரட்டுவோம்’’ என ஆவேசமாக கூறினர்.
இதன் காரணமாக பெங்களூருவில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரசை சேர்ந்த நடிகருமான அம்பரீஷை கண்டித்து அவரது, ‘கட் அவுட்’டுக்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
ஆனால்,  போராட்டத்துக்கு ஆதரவாக, மாண்டியா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ரம்யா தன், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், ‘தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கூடாது இது குறித்து கர்நாடக விவசாயிகளுக்கு சாதகமான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்’ என போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில்  குறிப்பிட்டிருந்தார்