கொசுத்தொல்லையில் இருந்து விடுபடணுமா? கோழி வளருங்கள்!

Must read

“கொசுத்தொல்லையால் அவதிப்படுகிறீர்களா..  நிம்மதியாக இரவு தூங்க முடியவில்லையா..  வீட்டில் கோழி வளருங்கள்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
கொசுவுக்கும் கோழிக்கும் என்ன சம்மந்தம்..  ஒருவேளை கொசுவை கோழி தின்றுவிடுமா.. என்றெல்லாம்  யோசிக்கிறீர்களா…
அதெல்லாம் இல்லை.. கோழி “வாசனையே” கொசுவுக்கு ஆகாதாம்.
a
அனோபிலிஸ் அராபியென்சிஸ் கொசு, விலங்குகளின் ரத்தத்தை காட்டிலும், மனித ரத்தத்தையே ரசித்துக் குடிக்கின்றன என்பதை  எத்தியோப்பிய மற்றும் ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்த போது ஒரு விசயம் அவர்களுக்கு புலப்பட்டதாம்.
அதாவது மனித ரத்தத்தையே கொசுக்கள் விரும்புகின்றன  என்றாலும் அவ்வப்போது ஆடு, மாடு என விலங்குகளின் ரத்தத்தையும் உறிஞ்சுகின்றன. ஆனால் இவை கோழிகள் இருக்கும் பக்கமே போவதில்லையாம்.
 ஆகவேதான், கொசுக்களை விரட்ட வேண்டுமா, கோழிகளை நிறைய வளருங்கள் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்!

More articles

Latest article