இந்தோனேசியாவில் சாலையில் ‘கிடந்த 26 நீளம் கொண்ட மலைப்பாம்பை கொல்ல முயன்றவரை கடித்ததால், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு அதிகாரி உதவியுடன் அடித்துக் கொன்றனர்.
பின்னர் அந்த பாம்பு பசியால் வாடிய அந்த பகுதி கிராமத்தினருக்கு விருந்தானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை சுமத்திரா தீவின் உள்ள பட்டங் கன்சல் பகுதியில் உள்ள ஒரு எண்ணெய் பனை தோட்டத்தில் பாதுகாப்பு அதிகாரி ரோந்து போகும்போது சாலையில் ஒரு பெரிய உருவத்துடன் மலைபாம்பு ஒன்று கிடந்தது. அதை கடந்துசெல்ல முயற்சித்த பாதுகாப்பு காவலர் அதை அகற்ற முயற்சித்தார்.
இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த நபாபன் என்பவர் அந்த பாம்பை உணவுக்காக பிடிக்க முயற்சித்தார். ஆனால் பாம்பு எதிர்பாராதவிதமாக நபாபனின் கையை கடித்தது.
பாம்பிடம் இருந்த நபாபனை காப்பாற்ற பாதுகாப்பு காவலர் மற்றும் கிராமத்தை சேர்தவர்கள் ஒன்றுச்சேர்ந்து அந்த மலைபாம்பை அடித்து கொன்றனர்.
தற்போது நபாபன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுமார் 7.8 மீட்டர் நீளம் (25.6 அடி), உள்ள மிகப்பெரிய அளவான அந்த பாம்பு மிகப்பெரியது. இவ்வளவு பெரிய மலைப்பாம்பு இருப்பதை நம்ப முடியாத அளவுக்கு அது பெரியதாக இருந்தது என்று அந்த பகுதி காவலர் தலைவர் சுதர்ஜா கூறினார்.
பின்னர் கொல்லப்பட்ட அந்த பகுதி கிராமத்தினர் வெட்டி எடுத்து, அதை வறுத்து உண்டு மகிழ்ந்தனர். பசியால் வாடிய அந்த பகுதி மக்களுக்கு இந்த மலைப்பாம்பு பெரும் விருந்தாக அமைந்தது.
பொதுவாக இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸில் 20 அடி நீளமான பெரிய பைதான் காணப்படும். ஆனால், இந்த பைதான் மிகப்பெரியது என அந்த பகுதி மக்கள் கூறினர்.