வாஷிங்டன்

ரு பகுதி ஒரே சாலை திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை அமைப்பதற்கு சீனாவுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா சாலை அமைப்பதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.   சர்ச்சைக்குரிய இடம் என்பதால் இந்தியா அங்கு சாலை அமைக்கவில்லை.   தற்போது இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு செய்லர் ஜிம் மாட்டிஸ் சீனா அங்கு சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜிம் மாட்டிஸ். “பரந்த இந்த உலகில் பல பகுதிகள் உள்ளன. பல சாலைகளும் உள்ளன.   அப்படி இருக்க ஒரு பகுதி ஒரே சாலை என சீனா அமைப்பது ஒரு சர்வாதிகாரமான செயல் ஆகும்.   மேலும் அந்த சாலை சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப் படுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல்.  சீனா அந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர செய்யும் சூழ்ச்சியே இந்த சாலை அமைப்பு.  ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானில் இதே செயலை சீனா செய்துள்ளது” என செனட் மீட்டிங்கில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பிருந்தே இந்தியாவுக்கு ஆதரவாக ஜிம் பேசி வருகிறார்.   சமீபத்தில் இந்திய பயணத்தின் போது நிர்மலா சீதாராமனை அவர் ஆஃப்கானிஸ்தானுக்கு இந்தியப் படைகளை அனுப்பக் கோரினார்.  ஆனால் இந்தியா ஆஃப்கானிஸ்தான் முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும், படைகளை அனுப்பாது எனவும் நிர்மலா அவர் கோரிக்கையை மறுத்து விட்டார்.   அப்போது இந்தியா ஆஃப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்து வருவதை ஜிம் பாராட்டி உள்ளார்.