சசிகலா ஆதரவு கோஷம் போட்ட வளர்மதிக்கு அதிர்ஷ்டம் அடித்தது: வாரிய தலைவரானார்..

Must read

சென்னை:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக முன்னாள் அமைச்சர் வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011-16ம் கால கட்டத்திலான அதிமுக ஆட்சியில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் வளர்மதி. இவர் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக பேசியும், பேட்டியும் அளித்து வந்தார்.

குறிப்பாக.. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அப்ரூவராக மாறி இருந்தால் அம்மாவும் கிடையாது…..அதிமுகவும் கிடையாது என்று சசிகலா துதிபாடி வந்தார். இவரது இந்த பேச்சு அதிமுக தொண்டர்களை எரிச்சலடைய செய்தது.

இந்நிலையில் வளர்மதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வருபவர்களில் முதாலவதாக வளர்மதிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதன் விளைவாக பலரும் ஜெயலலிதாவை புறம் தள்ளி சசிகலாவுக்கு துதிபாட தொடங்குவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது.

More articles

Latest article