சென்னை: சென்னையில் தண்டவாளத்தில் தேங்கியிருந்த நீர் அகற்றப்பட்டுள்ளதால், சென்னை புறநகர் ரெயில் சேவை சீரானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் பெய்த மழை காரணமாக வியாசார்பாடி, சென்ட்ரல் இடையே உள்ள தண்டவாளம் முழுவதும் மழைநீரால் மூழ்கியது. இதனால் புறநகர் ரயில் சேவை மாற்றப்பட்டதுடன், பல ரயிகளின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், நேற்று நள்ளிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருவதால், மழைநீர் அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனப்டி, பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை புறநகர் ரயில் சேவைகள் வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், பேசின்பிரிட்ஜி, எழும்பூர், தாம்பரம், பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். இந்நிலையில் பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் முழுமையாக அகற்றப்பட்டது. மழைநீர் வடிந்ததால் சென்னையில் ரெயில் இயக்கம் சீரானது. வழக்கம்போல் சென்ட்ரலில் இருந்தே ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.