மதவெறியர்கள் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்….

Must read

நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

நபிகள் நாயகம் தொடர்பாக டீவி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னார் பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபூர் ஷர்மா..
உள்நாடு முதல் அரபு நாடுகள் வரை பெரிய அளவில் பிரச்சனை வெடித்தது.
இப்போது நூபூர் ஷர்மா கருத்துக்கு ஆதரவாக முகநூலில் பதிவு போட்ட டெய்லர் ஒருவரை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பட்டப்பகலில் தலையை துண்டித்து படுகொலை செய்திருக்கின்றனர் இரண்டு இஸ்லாம் மத வெறியர்கள்.
பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர்.
மதத்தில் நம்பிக்கை வைத்துள்ள சாமான் யாரோ அல்லது மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களோஇது போன்ற படுகொலைகளில் இறங்குவதே கிடையாது.
மதத்தின் காவலர்கள் நாம் தான் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட வெறி பிடித்த கும்பல்தான், காலந்தோறும் இப்படி கொலைவெறி ஆட்டம் போடுகின்றன.
மதவெறி என்பது ஒருவர் மனதில் தன்னிச்சையாக கிளம்புவது அல்ல. திட்டமிட்ட கற்பிதங்கள் வழியேதான் உருவாக்கப்படுகிறது.
மதவெறி கொண்டவர்களுக்கு எதிராக மத நம்பிக்கை கொண்ட சாமானியர்கள் வெறுப்பை உமிழா இல்லாவிட்டால் இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்.
மத விஷயத்தில் கடவுள் தண்டிப்பார் என இந்த வெறியாளர்கள் நம்புவது கிடையாது. ஏனெனில், இவர்களது கடவுள்கள் பலவீனமானவர்கள் என்பதுதான் இவர்களது அசைக்க முடியா நம்பிக்கை.
அதனால்தான் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்.

More articles

Latest article