சென்னை,
தொலைக்காட்சி தொகுப்பாளரான மணிமேகலை திரைப்பட நடன கலைஞரை திருமணம் செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக உள்ள மணிமேகலைக்கும், திரைப்பட நடனக் கலைஞர் ஹுசைனும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு மணிமேகலையின் தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த வாரம் பதிவு திருமணம் செய்துகொண்டார்கள்.
இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஹுசைனை திருமணம் செய்ததால், மணிமேகலை மதம் மாறுவார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தான் மதம் மாற மாட்டேன் என்று மணிமேகலை கூறி உள்ளார். இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது,
எங்களது திடீர் திருமணத்தை பலர் வரவேற்று வாழ்த்தி வருவதாக கூறிய மணிமேகலை, சமூக வலைதளங்களில் மத ரீதியிலான விவாதங்களும் நடைபெற்றுள்ளன என்று கூறினார்.
ஹுசைனை நான் திருமணம் செய்துள்ளதால், மதம் மாறவேண்டும் என்பது இல்லை. அப்படியொரு எண்ணமும் என்னிடம் கிடையாது என்ற அவர், தனது கணவரோ, அவர்களது குடும்பத்தினரோ இதுகுறித்து என்னை வற்புறுத்தவில்லை என்று கூறினார்.
ஏற்கனவே நான் கோவிலுக்கு போகும்போது, ஹுசைன் எனக்குத் துணையாகப் பலமுறை வந்துள்ளார் என்று கூறிய மணிமேகலை, ஹுசைன் மேற்கொள்ளும் மதச் சேவைகளும் எனக்கு உடன்பாடுதான். அதன் காரணமாகவே இருவரும் திருமணம் செய்துகொண்டேம் என்றார்.
மேலும், தனக்கு மணிமேகலை என்ற அழகான பெயரை எனது பெற்றோர் சூட்டியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் அதை மாற்றிக்கொள்ளமாட்டேன்.
இவ்வாறு மணிமேகலை கூறி உள்ளார்.