திருப்பூர்: திருப்பூரில் ஏற்கனவே பள்ளியில் மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த பிரச்சினைக்கு இடையில், காதலித்த பெண்ணை முஸ்லிம் மதம் மாற வலியுறுத்தி, அவர் மறுத்ததால் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய  இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக பாலியல் புகார்களும், மதமாற்ற புகார்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிலையில்,  திருப்பூரில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பழக்கம் ஏற்பட்டு,  ஒன்றாக வாழ்ந்து வந்த காதலியை மதம் மாற வற்புறுத்தியதோடு, அவர் மதம் மாற மறுத்ததால், அவருடன் தங்கியிருந்த அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த  இளைஞர் இமான் ஹமீப். இவருக்கும் கரூரை சேர்ந்த 21 வயது பெண்ணும் இடையே சமூகவலைதளம் மூலம் பல மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழகியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த பெண் அவரை நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த இரு மாதங்களாக இருவரும், திருப்பூரில் ஒரு விடு எடுத்து  ஒன்றாக வசித்துள்ளனர்

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால்  மதம் மாற வேண்டும் என்றும், உடனே மதம் மாறு என்று  இமான் ஹமீப் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதை ஏற்காத அந்தப் பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரமுற்ற இமான் ஹபீப், தாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த அந்த புகைப்படங்களை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

இதைப்பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்ததுடன், இதுதொடர்பாக இமான் ஹமீப் மீது கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இமானை தேடி வநதனர். இந்த நிலையில், தற்போது  இமான் ஹமீபை போலீசார் கைது செய்துள்ளதாகவும்,  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.