மும்பை:
4ஜி புரட்சியை தொடர்ந்து ஸ்மார்ட் போன் செயலியுடன் (ஆப்) இணைந்த கால் டாக்சி சேவையை இந்தாண்டு இறுதியில் அறிமுகம் செய்ய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரலுக்கு பிறகு இதை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தது.
ஆனால், வர்த்தக ரிதியிலான சில பணிகள் காரணமாக மேலும், 6 மாத காலம் ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே செயலியுடன் இணைந்து கால் டாக்சி சேவை செய்து வரும் ஓலா, உபர் போன்ற கால் டாக்சி நிறுவனங்களு க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக பெங்களூருவிலும், சென்னையிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் டெல்லி, மும்பைக்கும் விரிவுப டுத்தப்படவுள்ளது. போபால், ஜெய்ப்பூர் போன்ற சிறிய நகரங்களிலும் கால் டாக்சி சேவை தொடங்கவும் ரிலையன்ஸ் திட்டமிட் டுள்ளது.
இதற்கான கார்களை பிரத்யேகமாக வடிவமைக்க மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் அணுகியுள்ளது. முழு சந்தையையும் தன் கையில் கொண்டு வரும் வகையிலான கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஜியோ ஆலோசனை செய்து வருகிறது.
‘ஜியோ மணி சேவை’ மூலம் செயலியுடன் இணைந்த கால் டாக்சி கட்டணம் செலுத்தும் செய்யும் திட்டங்களையும் தீட்டி வருகிறது. சமீபத்தில் உபர் கால் டாக்சி கட்டணத்தை ஜியோ மணி சர்வீஸ் மூலம் செலுத்த இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜி டெலிகாம் சேவை மூலம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது. இந்த வாடி க்கையாளர்களுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன் பிறகு இதில் எவ்வளவு வாடி க்கையாளர்களை ஜியோ தக்க வைத்துக் கொள்ள போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு தான் ஜியோ அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும்.