மும்பை:

மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 31 இடங்களை மட்டுமே பிடித்துள்ளளது. பாஜ, சிவசேனா ஆகிய கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் பாஜ 82 இடங்களிலும், சிவசேனா 84 இடங்களையும் பிடித்துள்ளது. யாரு க்கும் முழு பெரும்பான்மை (114) கிடைக்கவில்லை.

Congress

சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் மீண்டும் சிவசேனாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். இதனால் சிவசேனாவின் எண்ணிக்கை 87ஆக உள்ளது. அதனால் மும்பை மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளரை சிவசேனா நிறுத்தவுள்ளது.

இதில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால், தற்போது நடந்து கொண்டிருக்கும் உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு வரும் வரை எந்தவித முடிவும் எடுக்காமல் காத்திருக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியே சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எவ்வித வெளிப்படையான கருத்துக்களையும், அறிக்கைகளையும் தற்போது வெளியிட வேண்டாம் என மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது எந்த முடிவு எடுத்தாலும் அது 5 மாநில தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதால் அமைதி காக்க கட்சியினருக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

காவி கட்சியான சிவசேனா, காங்கிரசோடு பல கருத்துக்களில் ஒத்துப்போகவில்லை. மேயர் பதவிக்கு சிவசேனாவுக்கு ஆதரவு அளித்தால் காங்கிரஸ் கட்சியின் மதசார்பற்ற கொள்கைக்கு எதிராக அமையும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜ மாநில தலைவர் அசீஷ் சேலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் முதல்வர் டேவிஸ் பட்னாவிஸை அவரது இல்லத்தில் ச ந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், மேயர் பதவிக்காக காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஆசீஷ் சேலர் தெரிவித்தார். மேலும், மும்பை தேர்தலில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி 7, ராஜ் தாக்கரேயில் எம்எல்எஸ் 7, ஏஐஎம்ஐஎம் 2, சமாஜ்வாடி 6, அகில் பாரதிய சேனா1, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.