மும்பை:

கூடங்குளம் அணு மின் நிலையில் 2 யூனிட்களை செயல்படுத்தும் ரூ.1,081 கோடி மதிப்பிலான ஒப்பந்த்தில் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகள் சார்ந்த யூனிட் 3 மற்றும் யூனிட் 4 ஆகிய பிரிவுகளுக்கான இந்த ஒப்பந்தத்தில் பெல், எல் அண்டு டி, டாடா, பிஜிஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்த ஒப்பந்தம் 56 மாத காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த விபரங்களை ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவம் மும்பை பங்கு சந்தையில் தெரிவித்துள்ளது.