ஜியோ தொடக்கம்
மதியம் 1.15 மணி:
– ரிலையன்ஸ் ஜியோ சேவைகளின் ப்ரிவியூ லான்ச் செப்.5 என்றும், வர்த்தக ரீதியான தொடக்கம் டிசம்பர் 31 என்றும் அறிவிப்பு
– வாய்ஸ் கால்கள், குறுஞ்செய்தி, நேஷனல் ரோமிங் இன்றும் எனி என்றும் முற்றிலும் இலவசம்
– VoLTE வசதியுடன் கூடிய 4G LYF போன்கள் வெறும் ரூ.2999-க்கு
– ரூ.15,000 மதிப்புள்ள ஜியோ ஆப்ஸ்-க்கு டிச 2017 வரை இலவச ஆக்ஸஸ். இதன்மூலம் 300 லைவ் சேனல்கள், 6000 திரைப்படங்கள், 60,000 பாடல்கள், ஒரு லட்சம் டிவி சேனல்கள், ஜியோ மேகசின், ஜியோ நியூஸ் பேப்பர் மற்றும் ஜியோ மணி ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
டேட்டா திட்டங்கள் சந்தை விலையில் 1/10
- ஒரு ஜிபி டேட்டா வெறும் ரூ.50-க்கு
- இத்திட்டங்கள் எல்லா நாளும் தொடரும், பண்டிகை நாட்களுக்கென்று கட்டணங்கள் இல்லை
- வரையற்ற இரவு நேர 4 ஆக்ஸஸ்
- அதிக பட்ச டேட்டா பயனாளர்களுக்கான அதிகபட்ச கட்டணம் வெறும் 4,999 /- மட்டுமே!
- இந்தியாவின் பல இடங்களில் வைஃபை ஹாட் ஸ்பாட்
- மாணவர்களுக்கு 25% கூடுதல் டேட்டா
- ஜியோ நெட்வொர்க்கில் அதிகபட்சமாக பள்ளிகளும் கல்லூரிகளும் இணைந்திருக்கின்றன.
மதியம் 1.00 மணி:
ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 64 கோடி வாடிக்கையாளர்கள் செய்யும் கால்கள் மூலம் சுமார் 80,000 கோடி ரூபாய்களை சம்பாதித்து வந்தனர். வாய்ஸ் கால்களை முற்றிலும் இலவசமாக்கியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ அவர்கள் வருமானத்தை கணிசமாக பாதித்துள்ளது.
இப்படிஅதிரடி சலுகைகள் மூலம் 2018-வது பொருளாதார ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ ஈட்டப்போகும் வருமானம் சுமார் 70,000 கோடி (நபருக்கு ரூ.500/- மட்டுமே) இதில் என்ன லாபம் இருக்கப்போகிறது என்று துசியன் என்ற பொருளாதார நிபுணர் கேள்வி எழுப்பினார்.
மதியம் 1.05 மணி:
இலவச கால்களை அதிக அளவில் செய்யப்படும்பொது ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா ஆப்டிமைஸ்ட் நெட்வொர்க்கால் அதை சமாளிக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மதியம் 1.10 மணி:
ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டேட்டா கட்டணமும் ஒரு ஜிபிக்கு ரூ.125 என்ற விகிதத்தில் குறைக்கப்படுகிறது.
மதியம் 12 மணி முதல் 12.45 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள்
- வாய்ஸ் கால்கள் இலவசமாக்கப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு நல்லது. நாம் செய்தது மிகப்பெரிய சாதனை என்று முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்
- செப்டம்பர் 5 பரிசோதனை ஓட்டத்தை, வணிகரீதியான தொடக்கம் போலவே கருத வேண்டும். யாரும் பரிசோதனை ஓட்டத்தை இத்தனை வாடிக்கையாளார்களுடன் தொடங்கியதில்லை என்று மாத்தியூ என்பவர் புகழாரம் சூட்டினார்.
- ஜியோவின் சலுகை அறிவிப்புகள் குறித்து பலரும் கருத்து தெரிவிக்க துவங்குகிறார்கள்
- அம்பானி இப்போது நீட்டா அம்பானி பற்றி பேசிக்கொண்டிருகிறார்
- சில்லரை விற்பனை ரிலையன்ஸ் குழுமத்தின் தூண் போன்றது என்று அம்பானி குறிப்பிட்டார்
- ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் வீறுநடை போட்டுவருவதாக குறிப்பிட்டார்
- ரிலையன்ஸ் மார்ட் குறித்து பெருமிதம்
- ரிலையன்ஸ் ரீட்டெய்ல், இந்தியாவின் பெரும் சில்லரை வணிக சங்கிலி என்று குறிப்பிடுகிறார்
- நமது சேனல் கடந்த ஆண்டு 500 மில்லியன் பார்வையாளார்களை சென்றடைந்திருக்கிறது என்று பெருமிதம்.
- முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் பொது வியாபாரம் குறித்த கடந்த ஆண்டு பார்வையை பகிர்ந்து கொள்கிறார்
காலை 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகள்
- சரியாக 11.05 முகேஷ் அம்பானி பேசத் துவங்குகிறார்…
-
டேட்டா பற்றாக்குறையிலிருந்து டேட்டா மிகை நாடாக இந்தியா மாறும்
-
மார்ச் 17-க்குள் 90% இந்தியாவுக்கு 4ஜி வசதி
-
ரூ.15,000 மதிப்புள்ள ஜியோ ஆப்ஸ்-க்கு டிச 2017 வரை இலவச ஆக்ஸஸ்.
-
உலகத்திலேயே இதுதான் குறைந்த விலை: அம்பானி பெருமிதம்
-
நேஷனல் ரோமிங் இலவசம்
-
டேட்டா திட்டத்தை அம்பானி விளக்குகிறார்,
-
இரவு முழுவதும் இண்டர்நெட் இலவசம்
அம்பானியின் அறிவிப்புகளை தொடர்ந்து உடனடியாக பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது. ரிலையன்ஸ் பங்கு விலைகள் உயரத் தொடங்கனி. மற்ற செல்லுலர் நிறுவனங்களான, ஏர்டெல் 5%, ஐடியா 6% ஆகியவற்றின் பங்குகள் இறங்குமுகம் நோக்கி சென்றன.
பரிசோதனை ஓட்டம் செப்.5 முதல் ஆரம்பமாகிறது. வர்த்தக ரீதியான தொடக்கம் டிச 31 முதல் தொடங்கப்படுகிறது.
நமது குறிக்கோளான ஜியோ 100 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் பயணத்தை இன்று தொடங்குகிறது என்று அம்பானி அறிவித்தார்.
ரிலையன்ஸ் பற்றிய டிரண்டிங் டிவிட்டரில் முதலிடம் பிடித்துள்ளது.
நன்றி: http://www.moneycontrol.com/news/business/ril-agm-live-jio-will-realise-pms-digital-india-vision-says-ambani_7387301.html