சென்னை:
தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்கும்படி பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 3-ஆம் கட்ட ஊரடங்கு மே 17ந்தேதி வரைஅமலில் உள்ளது. இதற்கிடை யில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இன்று பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தல் பங்கேற்ற தமிழக முதல்வர், பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
அதன்படி,
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1000 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும்,
கொரானா தடுப்பு பணிகளுக்காக ஏற்கனவே கேட்ட ரூபாய் 2000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்
உள்பட மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு ஒதுக்க வலியுறுத்தினார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்
பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கையை வைத்துள்ளார்.