ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Must read

சென்னை:
ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கிது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நேரடி தேர்வுகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் நேரடித்தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மே மாதம் ஐந்தாம் தேதி தமிழகம்‌, புதுவையில்‌ மாநில பாடத்‌ திட்டத்தில்‌ பிளஸ்‌ 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 3,119 மையங்களில்‌ 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள்‌ பிளஸ்2 தேர்வை எழுதினர். இந்த தேர்வுகள் நேற்று நிறைவு பெற்றது.

இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article