கோர்ட் உத்தரவைவும் மீறி, கபாலி படத்தை இணையத்தில் ரிலீஸ்(!) செய்துவிட்டார்கள், திருட்டு வி.சி.டி. புலிகள்(!) என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், கபாலி தயாரிப்பாளர் தாணுவுக்கு கொஞ்சம் நிம்மதியான செய்தி ஒன்று உண்டு.
”டார்க் வெப் என்கிற இணையதளங்களில்தான் காபாலி வெளியாகி இருக்கிறதாம். டார்க் வெப் என்பது போதை பொருள் விற்பனை, கூலிப்படை, தீவிரவாதம், ஆயுத கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு உதவும் இணையதளங்கள்.
இவற்றை சாதாரணமாக நமது கம்ப்யூட்டர்களில், மொபைல்களில் பார்க்க முடியாது. இதற்கென்று சில அட்வான்ஸ்டு டெக்னாலஜி வேண்டும்.
இணையத்தில் பிரபலமான இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர், கூகுள் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் போன்ற சாதாரண ப்ரவ்சர்கள் மூலம் கபாலி படத்தை இப்போதைக்கு டவுன்லோட் செய்ய முடியாது.

TOR ப்ரவ்சர் பண்டிலை டவுன்லோட் செய்து அதன் மூலமாக மட்டுமே எட்டக்கூடிய சைட்களில்தான் இப்போது கபாலி படம் காணக்கிடைக்கிறது” என்கிறார்கள்.
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய் என்பார்கள். இந்த நிலையில் பார்க்காமலேயே என்னத்த சொல்றது?
Patrikai.com official YouTube Channel