தமிழ்நாட்டில் ஏவி.எம்., தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படத்துக்கு பூஜை போடும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, சொன்னபடி வெளியிடுவது வழக்கம்.
அந்த காலம் மலை ஏறி விட்டது.
தெலுங்கில் ஓம் ராவத் என்ற இயக்குநர் ஆதி புருஷ்”என்ற படத்தை இயக்க உள்ளார். இது ராமாயணக்கதையை, தழுவி எடுக்கப்படும் புராணப்படம்.
பிரபாஸ், கதாநாயகனாக, அதாவது ராமர் வேடத்தில் நடிக்கிறார். சயீப் அலிகான், ராவணனாக நடிக்க உள்ளார். ஷுட்டிங் தொடங்காத நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை டைரக்டர் ஓம் ராவத் அறிவித்துள்ளார்.
11-08-2022 அன்று இந்த படம் ரிலீஸ். ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். அதாவது, கிட்டத்தட்ட இன்னும் ஆண்டுகள் உள்ளன.
ராமனையும், ராவணனையும் தவிர மற்ற வேடங்களில் நடிப்போர் உறுதியாகவில்லை.
சீதை வேடத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது. அவர் கிடையாது என படக்குழுவினர் மறுத்து விட்ட நிலையில் இப்போது, கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபடுகிறது.
தெலுங்கிலும், இந்தியிலும் ஒரே சமயத்தில் இதன் ஷுட்டிங் நடத்தப்படுகிறது.
ஆனால் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
– பா. பாரதி