ட்டத்தக்குப் புறம்பாக திருட்டுத்தனமாக, புதிய படங்கலை இணையத்தில் வெளியிடும் இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இணையதளத்துக்கு, “எனது திரைப்படத்தை உடனடியாக அல்லாமல் கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் பண்ணுங்க..” என்று ஒரு இயக்கநர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.

“தனி ஒருவன்” ஹிட் படத்தை இயக்கிய மோகன்ராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் “வேலைக்காரன்”.  சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக முதன் முறையாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

மேலும், சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்ராஜா, “புது படம் வந்தால் ஒரு வாரம்தான் திரையரங்குகளில் ஒடுகிறது.  ஆனால், வேலைக்காரன் இன்னும் ஒரு வாரம் சேர்த்து 2 வாரம்  ஓடலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பிறகு தான் அடுத்தடுத்த படங்கள் வந்துவிடுகின்றனவே…

தவிர,  தமிழ் ராக்கர்ஸ் வேறு இருக்கிறார்கள்.  இவர்கள் தான் பெரிய திரைத்துறைக்கு பெரும் பிரச்சினை. ஆனால்  இவர்கள் தான் மிகச்சிறந்த வேலைக்காரன், மூளைக்காரன்.  ஒவ்வொரு படத்திற்கும் தூங்காமல் வேலை பார்த்திருப்பார்கள். . உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் செய்யலாம்” என்று பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது எப்படி இருக்கு?

[youtube-feed feed=1]