டில்லி

டில்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.

டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.  இன்று 255 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிர் இழந்து 375 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3,466 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  எனவே டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.

ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின் போது தொற்று அதிகரித்தால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளது.  மேலும் நாளை முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் விவரம் பின் வருமாறு

  • 50% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி
  • ஆட்டோ, இ ரிக்‌ஷா, மற்றும் டாக்சிகள் இரு பயணிகளுடன் இயங்க அனுமதி
  • வாரச்சந்தைக்கு அனுமதி.  ஆனால் ஒரு மண்டலத்துக்கு ஒரு சந்தைக்கு மட்டுமே அனுமதி
  • விருந்து அரங்குகள், ஓட்டல்கள், உள்ளிட்ட பொது இடங்களில் திருமணங்களுக்கு அனுமதி இல்லை.  வீடுகளில் நடக்கும் திருமணங்களில் 20 பேர் வரை அனுமதி
  • இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி
  • தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி
  • அனைத்து மால்களும் வணிக வளாகங்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக இயங்க அனுமதி.