திருக்கடையூர்:  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 7 ஊராட்சிகள் ஒரு பேரூராட்சி  சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரேக்ளா ரேஸ் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு  கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகயையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல, ஜல்லிக்கட்டு போட்டிகள், ரேக்ளா ரேஸ், சேவல் சண்டைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் ஆண்டுதோறும் 7 ஊராட்சிகள் ஒரு பேரூராட்சி  சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, நடைபெறாத நிலையில், இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

னு, காணும் பொங்கல் அன்று திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  ல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து,  30 பேர் கொண்ட விழா குழுவினர் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று  மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரேக்ளா ரேஸ் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட மற்றும் இன்றி இப்போட்டியில் பங்கேற்கும் பல் மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்குச் சிறிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி என்.என்.சாவடி தொடக்கப்பள்ளி வரை 5 கி.மீ. நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி அனந்தமங்கலம் ஆர்ச் மற்றும் மகிமலையரு பாலம் வரை நடைபெறும்.

அதுபோன்று, குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் மதியம் 1.30 மணிக்கு திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்சில் தொடங்கி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வரை 10 கி.மீ. நடைபெறுகிறது.

திருக்கடையூரில் உத்திராபதியார் நினைவாக 43 ஆண்டுகளாக காணும் பொங்கல் அன்று மாடு, குதிரைகளை கொண்டு ரேக்ளா ரேஸ் (எல்கைப் பந்தயம்) நடத்துவது வழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பந்தயம் தற்போது மூன்றாண்டுகள் இடைவெளிகளுக்கு பிறகு நடைபெறுவதால் இதனை  காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளனர். முன்னதாக கால்நடை மருத்துவர் குழுவினர் பேட்டியில் பங்கேற்கும் மாடு மற்றும் குதிரைதளை பரிசோதனை செய்து தகுதி சான்றுகள் வழங்கி பேட்டிகளுக்கு அனுமதித்தனர்.