மீண்டும் இணைகிறது மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி!

Must read

                                                                                                              சென்னை, 

தமிழ்ப்பட உலகில் முன்னணி இயக்குநர் மணிரத்தினம் தற்போது காற்று வெளியிடை என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இதில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.  நீண்ட காலத்துக்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி இந்தப்படத்தின் மூலம் மீண்டும் மணிரத்னத்துடன் கைகோர்க்கிறார்.  அரவிந்த் சாமி ஏற்கனவே மணிரத்னத்தின் தளபதி, ரோஜா, பம்பாய், கடல்,  ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு தனிஒருவன் படத்தின்மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து  அவருக்கு படவாய்ப்புகள் நிறைய வருகின்றன.

இதனிடையே தற்போது காற்றிவெளியிடை படத்தில் அரவிந்த்சாமி  நடிக்கிறார் என   இயக்குநர்  மணிரத்னம் உறுதி செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

 

இந்தப்படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்பாற்றலுக்குச் சவால் விடும் வகையில் பாத்திரப் படைப்பு இருக்கும்  என சொல்லப்படுகிறது.  ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

More articles

Latest article