நெட்டிசன்:
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய மந்திரி பதவியை துறந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். தன்னைத்தேடி வந்த முதல்வர் பதவியையும் அவர் மறுதலித்தார் என்பது புதிய தகவல்.

வாழப்பாடியார்
வாழப்பாடியார்

இதைச் சொல்கிறது கே.ஆர். கொளஞ்சியப்பன் (Kr Kolanchiappan   )  அவர்களின் முகநூல் பதிவு:
“1989 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக திரு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள், திரு ராஜிவ்காந்தி அவர்களால் நியமிக்கப்பட்டார். அப்போது வந்த துக்ளக் பத்திரிக்கையின் ஒன்னரைப்பக்க நாளேட்டில் (அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் கேலி செய்யும் பகுதி அது) தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கருப்பையா மூப்பனார் நீக்கம். புதிய தலைவராக முனுசாமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அந்த முனுசாமி என்று தமிழக காங்கிரசார் வலைவீசி தேடி வருகிறார்கள் என்று வாழப்பாடியாரின் நியமனத்தை நையாண்டி செய்திருந்தார் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி அவர்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே துக்ளக் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகரின் கேள்விக்கு, தைரியமாக உண்மையை பேசக்கூடிய ஒரே அரசியல் தலைவர் திரு வாழப்பாடி இராமமூர்த்தி ஒருவர்தான் என சோ பதில் அளித்திருந்தார். இது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு ஒப்பாகும்.
ன்றைய முதல்வரின் ராஜினாமா கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கட்சியை சார்ந்த முக்கிய அமைச்சர் தலைவரை சந்தித்து அண்ணே, கவர்னரை இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள், நீங்களே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள், நான் துணை முதல்வராக இருக்கிறேன் இந்த பெண்மணியை நம்பக்கூடாது அண்ணே என்றாராம். அதற்கு வாழப்பாடியார் கொல்லைப்புற வழியாக அரசியல் செய்பவன் நானல்ல. என்றாராம். இந்த பிரச்சனை பிரதமர் நரசிம்மராவ் கவனத்துக்கு போனது. அவர் அர்ஜுன்சிங்கை விசாரிக்க கூறினாராம். என்ன ராமமூர்த்தி அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்களே அவர்களே வந்து உங்களை ஆதரிக்கும் போது நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாமே. காங்கிரசுக்கு முதல்வர் பதவி என்பது இனி கனவில்தானா என்றாராம். அதற்கு வாழப்பாடியார் சொன்ன பதில் இது, துரோகம் என் ரத்தத்தில் கிடையாது, ஒருபோதும் நம்பியவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டேன். இப்போது தெரிகிறதா பதவி எங்களுக்கு பெரிதல்ல, வாழப்பாடியாரின் தொண்டன் என்ற கௌரவம்தான் எங்கள் உயிர்மூச்சு.
1996 ல் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடும்போது எதிர்த்து நின்றவர் அவரின் குருநாதரான எம்.பி.சுப்ரமணியம். பிரஸ்மீட்டில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார் எம்.பி.எஸ் உங்கள் குருவாச்சே அவரை எதிர்த்தா போட்டியிடுகிறீர்கள் என்று? யோவ், அரசியலில் குருவாவது, சிஷ்யனாவது நீ மகாபாரதம் படிக்கவில்லையா என்றார். இதுபோன்ற நெற்றியடி பதில்களை அவரன்றி எவரால் தர முடியும்?
ஆற்காடு வீராசாமி
ஆற்காடு வீராசாமி

வாழப்பாடியாரின் மறைவுக்குப் பின் 2010 ல் அவரின் 70 வது பிறந்தநாள் விழா தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது. தி.மு.க.பொருளாளர் திரு.ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றிருந்தோம். அப்போது அவர் கூறியது, தினம் காலையில் எங்கள் தலைவர் கலைஞர், என்னய்யா இன்னைக்கு ராமமூர்த்தி என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்பார். தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவரப்பா அவர். சில நிகழ்ச்சிகளில் அவரை நேரில் சந்திக்கும் போது என்ன தலைவா எங்களை இந்தபாடு படுத்தறீங்களே என்பேன் அதற்கு அவர் அதுதான்யா அரசியல், நீ உன் கட்சியை விட்டுக் கொடுப்பியா? நீயும் நானும் நண்பர்கள், அது வேறு. அரசியல் என்று வந்துவிட்டால் நாம எதிரிதான், என் கட்சியும் தொண்டனும்தான் எனக்கு முக்கியம் என்பார். அவர் இல்லாததால், காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சிக்கும், அதன் அடிமட்ட தொண்டனுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியவர். எந்த நிலை வந்தாலும் தொண்டனை விட்டுக் கொடுக்காத ஒரு தலைவர். ஒரு தாயாக இருந்து தன் கட்சி வளர்ச்சிக்காக, கட்சியினரின் உயர்வுக்காக உழைத்தார். அதே நேரம் தீயாக இருந்து எதிர்க்கட்சிகளை சுட்டெரித்தார். தலைவா, நீ இல்லாதபோதுதான் உன் அருமை எங்களுக்குத் தெரிகிறது. ஆம், தறிகெட்டு, நெறிகெட்டு, முறைகெட்டு தமிழக காங்கிரஸ் முச்சந்தியில் அனாதையாக நிற்கும்போதுதான் தெரிகிறது நாங்கள் இழந்தது எவ்வளவு வலியதென்று