சென்னை: சென்னை போரூரை அடுத்த மணப்பாக்கம்‘த்தில்,  மியாட் மருத்துவமனையின்  ‘மறுவாழ்வு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த மறுவாழ்வு மையத்தை  முதல்வர்  தொடங்கி வைத்தார்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது, மியாட் மருத்துவமனையின் இயக்குனர் பிரித்தீவ் மோகன்தாஸ் உடனிருந்தார்.

புதிய மறுவாழ்வு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுவாழ்வு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டனர். மேலும், மையத்தின் செயல்பாடுகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகஇயக்குநர் பிரித்வி மோகன்தாஸிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து,  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, மையத்தைப் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் கூறும்போது, “காரோனா தொற்று காலத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக பிரிவை அமைத்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைகுணப்படுத்தியுள்ளோம். கொரோனாவின் கடும் தாக்கத்துக்கு உள்ளாகும் நபர்கள்  அதிலிருந்து குணமடைந்தாலும், அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் குறைவதில்லை. குறிப்பாக, நுரையீரல் பாதிப்பு, நரம்பு சார் பிரச்னைகள், இதயம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனால்,அவர்களது இயல்பு வாழ்க்கைபாதிக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு, அத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த மையத்தைத் தொடங்கியுள்ளோம்.

நுரையீரல் சீராக்கம், இயன்முறை சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, இதய சீராக்க சிகிச்சை, நரம்பு பாதிப்புகளுக்கான கண்காணிப்பு, நடுக்குவாத சிகிச்சைகள் உட்பட பல்வேறு சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இதற்காக மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.