சென்னை:

முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரொனோ வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ள முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில், 3 லேயர் மாஸ்க், n95 மாஸ்க், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், காட்டன், மாஸ்க் மற்றும் வெட்டி வேரால் செய்யப்பட்ட மூலிகை மாஸ்க் வரை பல மாஸ்க்குகள் விற்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல் தங்களுடைய முகங்கள் போல் மாஸ்க்கில் அச்சிட்டு அதை பயன்படுத்துவதும் வகையிலும் மக்களை கவரும் வகையிலும் பல விதமான மாஸ்க்குகள் அறிமுகமாகியுள்ளன. ஆனால் எந்த முகக்கவசங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், அதை விலை, தரம் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனம், முக கவசம் காலவதியாகும் தேதி போன்ற எந்த விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் இது வரை உருவாக்கவில்லை.

இதன் காரணமாக பல வண்ணங்களில் சாலைகளில் திறந்தவெளியில் மாஸ்க்குகளை விற்கிறார்கள். இதை வாங்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது.முகக் கவசம் தொடர்பான தெளிவான விதிமுறைகளை வகுத்து அரசு அறிவிக்கவில்லை என்றால் மடை திறந்த வெள்ளம் போல் முகவசத்தை யார் வேண்டுமானலும் உற்பத்தி செய்து, அவர்கள் விருப்பட்ட விலைக்கு எந்த ஒரு விற்பனை ரசிதும் இன்றி விற்கும் சூழலும் உருவாகும்.

எனவே எந்தெந்த முகக்கவசத்தை எந்தெந்த வயதினர் அணிய வேண்டும், உற்பத்தி, விலை, தரம், காலாவதி காலம் உள்ளிட்டவை குறிப்ப்பிட்டு முகக்கவசத்திற்கான விதிமுறைகளை வெளியிட வேண்டும. அதுவரை முகக்கவசம் அணியாமல் செல்பவரிடம் அபராதம் வசூலிப்பதற்கு தடை விதிக்க கோரியும், முகக்கவசத்தை பயன்படுத்து மற்றும் பயன்படுத்திய பின்னர் அதை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.