சென்னை:

மிழகத்திலும் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

அதையடுத்து,  தமிழகம் முழுவதும்  பத்திரப்பதிவு அலுவலகங்கள்  திறக்கப்பட்டு உள்ளது.  ஒரு மணிநேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாள் ஒன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பீதி காரணமாக பலர் வேலைக்கு வராமல்விடுமுறை எடுத்துள்ள நிலையில் சிலர் மட்டுமே இடைவெளியைக் கடைப்பிடித்து, கொரோனா பாதுகாப்பு கவசங்களுடன் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், இதுவரை எந்தவொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்திரங்கள் ஏதும் பதியப்பட வில்லை. மக்கள் வெளியே நடமாடவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவு செய்யப்போவது யார் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது பத்திரப்பதிவு அலுவலகங்களின் வேலை நேரத்தையும் மாலை 5 மணி வரை நீட்டித்து பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.

அரசின் வருவாய் கருதி பத்திரப்பதிவுத்துறை சார் – பதிவாளர் அலுவலகம் செயல்பட அரசு உத்தர விட்டாலும், சொத்துக்களை வாங்கவோ, விற்பனை செய்ய முடியாத சூழல் நிலவி வருவதால்,     ஆவண எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க…