டெல்லி: மூலப்பத்திரம் (தாய் பத்திரம் – Parent document) இல்லாமல் பத்திரப்பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதன் காரணமாக போலி பத்திர பதிவுகளும் அதிக அளவில் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம், சொத்தின் அசல் தாய் பத்திரத்திற்கான ஆவணத்தையோ அல்லது தாய் பத்திரமோ தொலைந்து போயிருந்தால் காவல்துறையிடமிருந்து கண்டுபிடிக்க முடியாத சான்றிதழையோ சமர்ப்பிக்காததால், துணைப் பதிவாளர்கள் சொத்து பரிமாற்ற ஆவணத்தைப் பதிவு செய்ய மறுக்க முடியாது என்றும், அதாவது, சொத்து பரிமாற்றத்திற்கு அசல் (தாய் பத்திரம் – மூலப்பத்திரம்) ஆவணம் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. அதாவது பேரன்ட் டாக்குமென்ட் எனப்படும் அசல் ஆவணம் (மூலப்பத்திரம்) தொலைந்து போயிருந்தால், காவல்துறையினரிடமிருந்து கண்டுபிடிக்க முடியாத சான்றிதழைக் கூட சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். இந்த தீர்ப்பு, 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, மனுதாரரின், அசல் மூல ஆவணத்தை சமர்ப்பிக்காததால் துணைப் பதிவாளர் தீர்வுப் பத்திரத்தைப் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம், 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்ட விதி 55A படி, தாய்ப்பத்திரம் இல்லாமல் பதிவு செய்வதை தடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரரின் பத்திரப் பதிவை, பதிவு செய்ய மறுப்பது தன்னிச்சையானது மற்றும் 1908 ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறிய நிநீதிபதிகள், “தமிழ்நாடு பதிவு விதிகளின் விதி 55A, துணைச் சட்டமாக இருப்பதால், பதிவுச் சட்டத்தின் அடிப்படை விதிகளை மீற முடியாது” என்றும், தாய்ப்பத்திரம் தவிர மற்ற அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், மூலப் பத்திரத்தை சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் தீர்வுப் பத்திரத்தைப் பதிவு செய்ய துணைப் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதுடன், உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம், தாய்ப்பத்திரம் (மூலப்பத்திரம்) இல்லாமல் பத்திர பதிவு செய்ய முடியாது என்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

முன்னதாக, நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர், ஒருவர், தனது மூதாதையர் சொத்தை தன் பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். இந்த பத்திரப்பதிவுக்கு தேவையான, மூலப்பத்திரம் இல்லை என்பதால், அதுகுறித்து, ராசிபுரம் சார்பதிவாளரை அணுகியுள்ளார்.
ஆனால் ராசிபுரம் சார்பதிவாளர் மூலப்பத்திரம் இல்லாததால் ஏற்கனவே பெறப்பட்ட மூலப்பத்திரத்தின் நகலையும் ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்த மூலப்பத்திரத்தின் நகலை ஏற்க உத்தரவிட வேண்டும் என்று பப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியம், சக்திவேல் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், விதி 55 ஏ, போலியான ஆவணங்கள் மூலம் பதிவுகள் செய்வதை தவிர்க்கும் வகையில் பின்பற்றப்படுகிறது என்று வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் பப்பு தரப்பில் வாதிடுகையில், தமிழக அரசின் பதிவுத்துறை விதி 55ஏ அடிப்படையில் மூல ஆவணங்கள் இல்லாததை காரணமாகக் காட்டி பதிவு செய்ய மறுக்கிறார்கள். ஆனால், பதிவுத்துறையின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் இணைத்து இருந்தேன். மூல ஆவணங்கள் இல்லாததை காரணம் காட்டி உரிமை விடுவிப்பு செய்ய முடியாது என்று கூறுவது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு பின்னர் அக்டோபரில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் கூறுகையில், “வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவு சட்டப்படி மூலப்பத்திரம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும்.. அதுவும் இல்லாவிட்டால் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து, அதற்கு போலீசார் அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மூலப்பத்திரம், அல்லது மூலப்பத்திரம் கிடைக்கவில்லை என்ற போலீஸ் சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப்பார்த்து பதிவு செய்ய வேண்டும், அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் என்பதால், அதனை ஒப்பிட்டுப் பார்த்து மனுதாரரின் சொத்து மாற்ற பத்திரத்தை ராசிபுரம் சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
அதாவது மூல ஆவணங்கள் வழங்கவில்லை என்ற காரணத்தால் பத்திர பதிவை மறுக்க முடியாது. மேலும் தமிழ்நாடு பதிவு விதி 55 ஏ சட்டப்பூர்வமற்றது என்றும், மூல ஆவணங்கள் இல்லாவிட்டாலும், நகல் ஆவணங்கள் இருந்தால் பதிவு செய்ய வேண்டும் என்றும் உரிமை விடுவிப்பு, பரிவர்த்தனை போன்ற சட்டபூர்வமான சொத்து பரிமாற்ற ஆவணங்களை தடுக்க முடியாது என்றும் மாநில அரசு சட்டங்களை பயன்படுத்தி சொத்து உரிமையை தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபேய் ஓகா, உஜல் புயான் ஆகியோர் அமர்வு, தமிழ்நாடு அரசின் மே இந்த வழக்கில் தலையிட எந்த அவசியமும் இல்லை” என்று தெரிவித்ததுடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இனி மூல ஆவணங்கள் இல்லாததை காரணமாக கூறி சொத்துகளை பதிவு செய்வதை சார்பதிவாளர்கள் மறுக்க இயலாது. நகல் ஆவணங்கள் இருந்தாலே பதிவு செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவு துறை அனுப்பி வைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.