சென்னை

டுக்குமாடிக் குடியிருப்புக்கான ஆவணப்பதிவுக்கட்டண உயர்வு குறித்து பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கட்டிட நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டும் போது முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு, பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களிடம் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில், கட்டுமான ஒப்பந்தம் செய்து கொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஆவணங்களைப் பொறுத்தவரைக் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்துப் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது  சொந்த வீடு வாங்குவோருக்குப் பதிவு கட்டணம் உயர்வு எனப் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.