கெய்ரோ:
போர் பாதித்த வளைகுடா நாடுகளான சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கனக்கானவர்கள் சென்றுள்ளார்கள்.
உரிய அனுமதி பெற முடியாத நிலையில், திருட்டுத்தனமாகவே  கப்பல்களை அமர்த்திக்காண்டு செல்கிறார்கள். அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதால், இது போன்ற “அகதி கப்பல்கள்” விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கிறது.
a
அதே போன்ற ஒரு விபத்து மீண்டும் நடந்துள்ளது. எகிப்து அருகே 600 பேருடன் ஐரோப்பிய கண்டத்தை நோக்கிச் சென்ற அகதிகள் கப்பல் ஒன்று தண்ணீரில் மூழ்கியது.  தகவல் அறிந்து மீட்புப் படை வீரர்கள் உடனடியாக களம் இறங்கினஆர்கள். இதுவரை 150 பேர் உயிருடன் மீட்கப்பபட்டுள்ளனர். மேலும் 30 பேர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை பத்தாயிரமாக உயர்ந்துள்ளது.