சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் தொற்று தகவலைத் தடுக்கும் விதமாகத் தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆர்.டி.பி.சி.ஆர்.டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு, ரேபிட், RTP-PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரேபிட் பரிசோதனை கட்டணம் ரூ. 3,400 இலிருந்து ரூ.2,900 க்கும், RT-PCR பரிசோதனை கட்டணம் ரூ.700 இலிருந்து ரூ.600 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.