கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் – சைலேந்திரபாபு எச்சரிக்கை

Must read

சென்னை: 
ஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும்,
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களைக் கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸாப் குழுக்களை உருவாக்கி, ரகசியத் தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தப் பணியினை சென்னை காவல் ஆணையர், கூடுதல் காவல் இயக்குநர், சட்டம் ஒழுங்கு ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article