சென்னை:
ணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தின.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.3 அதிகரித்து ரூ.1018.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.2499-லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில்,சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைந்து ரூ.2373-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆனால்,வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.