காவல்துறையில் பணிபுரிபவர்களை குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக பேசிய சவுக்கு சங்கரின் வீடியோவை வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் நிறுவனம் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து தகாத முறையில் பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த நேர்காணலை எடுத்த ரெட் பிக்ஸ் நிறுவன எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
பெலிக்ஸ் ஜெரால்டின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது மனைவியும் ரெட் பிக்ஸ் நிறுவன பொது மேலாளருமான ஜேன் பெலிக்ஸ் தனது நிறுவனத்தின் செயலுக்காக மன்னிப்பு கேட்டு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் சவுக்கு சங்கரின் கருத்துக்கும் தங்களது நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பெண் காவலர்களின் மனது புண்படும் விதமாக நடந்து கொண்டதர்க்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளனர்.