பத்திரிகை. ஊடகங்களில் அதிகமாக இடம் பிடிக்கும் செய்தி செம்மர கடத்தல் பற்றியதுதான். கூலிக்கு வேலை செய்ய செல்லும் கிராம மக்கள் எப்படி இந்த கடத்தல் வழக்கில் சிக்குகிறார்கள்? இதன் பின்ணனியில் இருப்பவர்கள் யார்?
எங்கு துவங்கி எப்படி இதன் நெட்வொர்க் நடக்கிறது என்பதை யதார்த்தமான திரைக்கதையில் “ஆந்திரா ” படத்தை இயக்கி உள்ளேன்.” என்று கூறினார் அறிமுக இயக்குனரான டி.ஏ.வினோபா.
“ஆந்திரா ” படத்தில் நாயகனாக பார்கவன், இன்னொரு நாயகனாக ரோகித், நாயகியாக நக்மா, இன்னொரு நாயகியாக பிருந்தா, மற்றும் ரூபாவதி,
ராஜு ரெட்டி, ரூபாஸ்ரீ, தினேஷ், பானு, சித்ரகுப்தன், ராதா, லவ்லி ஆனந்த், இந்தியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் .ஆர்.சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கவிக்குமார், பூங்கொடி ச .அன்பழகன், முரளி நால்வரும் எழுதிய பாடல்களுக்கு கர்ணா இசையமைத்துள்ளார்., பவர் சிவா நடன பயிற்சி அளிக்க . அன்பு – முத்து இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கொளக்கா நத்தம், வேலூர், திருவண்ணாமலை, ஏலகிரி மற்றும் ஆந்திராவின் மலை பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது என்கிறார். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ள டி.ஏ. வினோபா. இவர் அடையாறில் உள்ள அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் டைரக்ஷ்ன் துறையில் பயின்றவர். இவர் இயக்கம் முதல் படமிது.
ஒரு மாநிலத்தின் பெயர் தான் “ஆந்திரா “. அந்த பெயரிலேயே இந்த படத்தை சக்தி பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் ஆர்.சக்திவேல் தயாரித்துள்ளார்.