சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறும் சிதம்பரம் நடராஜர் கோவல், தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது. இந்த கோயில் நிர்வாகம் தீட்சதர்களிடம் இருந்து வருகிறது. இந்த கோவில்களில் அவ்வப்போது தீட்சதர்களால் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதனால், இந்த கோவிலை தமிழகஅரசு வசப்படுத்த முயற்சித்து வருகிறது.

இநத் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு, கோவில்களில் உள்ள ஆக்கரிமிப்புகளை பற்றி கேட்டறிந்து அதற்கு உரிய நடைவேடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் அடிப்படை வசதி செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றவர், கடந்த 8மாதங்களில், அறநிலையத்துறைக்கு உட்பட்ட 100 மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடித்திருப்பதாகவும், 2400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கரிமிப்புகளை மீட்டுள்ளோம் மொத்தத்தில் ஜெட் வேகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
10 ஆண்டுகள் நிலுவையில் இருக்கின்ற திருக்கோவில் பணிகளை விரைவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வடபழனி ஆண்டவருடைய திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிறப்பாக குடமுழுக்கு நடத்தப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்டெடுப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுக்கள் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்த பிறகு சட்ட வல்லுனர்களின் ஆலோசனை படி கோவிலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]