சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா குணமான நிலையில், இனறு காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ந்தேதி உடல்சோர்வு காரணமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி யானது. இதையடுத்து, அவர் டிவிட் மூலம் அதை உறுதிப்படுத்தி இருந்தார். அதில், “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்வதற்காக கடந்த 14ந்தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் முதலமைச்சர் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வலியுறுத்தியதால், அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், அவருக்கு கொரோனா குணமடைந்து விட்டதாகவும், ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் கடந்த 16ந்தேதி அறிவித்தது.
இநத் நிலையில், இன்று காலை காவேரி மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார். மு.க.ஸ்டாலின், மேலும், ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.