இங்கிலாந்தில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக 5000 பேர் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் கேட்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

oscarjpeg

இங்கிலாந்தின் வோர்செஸ்டர் பகுதியை சேர்ந்த ஒலிவியா சேக்ஸல்பி மற்றும் ஜேமி லீ தம்பதியினரின் மகள் ஆஸ்கர் சேக்ஸல்பி லீ. 5 வயதுடைய ஆஸ்கர் லூக்கிமியா வகையை சேர்ந்த அரிய ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆஸ்கருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், அழிந்து வரும் ஸ்டெம் செல்லுக்கு பதிலாக அதே வகையை சேர்ந்த புதிய ஸ்டெம் செல்களை பொறுத்தினால் மட்டுமே சிறுவனை காப்பாற்ற முடியும் என்று கூறினார்.

புதிய ஸ்டெம்செல் பொருத்தும் சிகிச்சையை 3 மாதத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் ஆஸ்கருக்கு வந்த நோய் குறித்தும், அவனுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் இடையே தகவல் பரவியது. இதையடுத்து, சிறுவனுக்கு உதவ அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். சிறுவனுக்கு ஸ்டெம்செல் அளிக்கும் கொடையாளியை பரிசோதிபதற்கான முகாம் வோர்செஸ்டரில் உள்ள பிட்மாஸ்டன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

ing

ஸ்டெம்செல் கொடையாளியை கண்டறியும் பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான சுமார் 4,855 பேர் கலந்து கொண்டனர். அப்போது, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் சிறுவனுக்கு ஸ்டெம்செல்லை தானமாக வழங்க முன்வந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய சிறுவனின் தந்தை சேக்ஸல்பி, “ ஆரம்பத்தில் எங்களால் ஆஸ்கரை காப்பாற்ற முடியாது என்று நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அவனின் புன்னகையை பார்க்கும் போது எங்களால் முடியும் என்ற நம்பிக்கை வந்தது. ஆஸ்கர் தைரியம் எங்களுக்கு வலிமை தந்தது. ஒருமுறை கூட சோர்வாக அவனை நாங்கள் பார்த்ததில்லை. அவனுக்காக இத்தனை பேர் ஒன்றுக் கூடியது மிகுந்த நெகிச்ழ்ச்சியை அளிக்கிறது “ என்றார்.