டில்லி

ந்தியாவில் ஏடிஎம் கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது நோட்டுப் பற்றாக்குறை ஏற்பட்டது.   அதை ஒட்டி மக்கள்  ஏடிஎம் வாசலில் நீண்ட வரிசையில்  நிற்க நேரிட்டது.    அதன் பிறகு நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன.   தற்போது  புழக்கத்தில் தேவையான கரன்சி நோட்டுக்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே வேளையில் தற்போது ஏடிஎம் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.   முன்பு இருந்ததை போல் இல்லாமல் பல இடங்களில் ஏடிஎம் கள் மூடப்பட்டுள்ளன.  சமீபத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்த கணக்கின்படி மக்கள் தொகையில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு ஏடிஎம் என்னும் விகித்தத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஏடிஎம் மூடல்கள் மேலும் அதிகரிக்கலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது.   இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு காரணமாக மென்பொருள் மேம்படுத்தப் படுவதற்கான செலவு அதிகரித்துள்ளதே ஆகும்.    இந்த ஏடிஎம் மூடலினால் மக்களில் பலர் குறிப்பாக பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள் பெருமளவில் பாதித்துள்ளனர்.   அவர்களில் பலர் இன்னும் ரொக்க பரிவர்த்தனை மட்டுமே செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி வங்கிகள் மற்றும் தனியார் என அனைத்து ஏடிஎம் அமைப்பாளர்களாலும் செலவை சரிக்கட்ட முடியாத நிலை உள்ளது.   இந்த ஏடிஎம் கட்டணங்கள் வங்கிக்கு வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 வசூலிக்கப்படுகிறது.   இதற்கு இண்டர்சேஞ்ச் கட்டணம் என பெயராகும்.  இதைக் கொண்டு ஏடிஎம் கள் நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

எனவே இந்த இண்டர்சேஞ்ச் கட்டணம் மட்டும் செலுத்தி மற்ற வங்கிகளின் ஏடிஎம் களை பயன்படுத்த ஒவ்வொரு வங்கியும் எண்ணி வருகிறது.  ஏடிஎம் கள் மூடப்படுவதற்கு இது மற்றொரு காரணம் என கூறப்படுகிறது.   அதே நேரத்தில் ஏடிஎம் மூடுவதை தவிர்க்க கட்டணங்களை அதிகப்படுத்துவது சரியான தீர்வு இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டணம் அதிகரீக்கப்பட்டால் அந்த கட்டண அதிகரிப்பை வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் வசூலிக நேரிடும்.    எனவே இதை வாடிக்கையாளர்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் கருத்து நிலவுகிறது.

அது மட்டுமின்றி பல வங்கிகள் தங்கள் கிளைகளில் உள்ள ஏடிஎம் களை மட்டுமே நடத்தி வருகின்றன.    மற்ற இடங்களில் உள்ள் ஏடிஎம் களை வங்கிகள் மூடி வருகின்றன.  விரைவில் மற்ற இடங்களில் உள்ள  ஏடிஎம் மூடல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.