
சென்னை,
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று புழல் சிறையில் இருந்து மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையினுள் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்திக்கு தாரை தப்பட்டை முழங்க மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்றனர். தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.
அப்போது, தமிழ்நாடு எங்கள் தாய்நாடு. தமிழ்நாட்டின் உரிமையை மீட்க எத்தனை ஆண்டு களானாலும் சிறை செல்ல தயார் என அவர் கூறினார்.
மேலும் விவசாயிகள் ,நெசவாளர்கள் மற்றும் மீனவர்களை காக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel