வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது முழுப்பெயர் அருணாச்சலம் செட்டியார் லட்சுமணன். (Arunachalam Chettiar Lakshmanan) வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ராஜஸ்தான், ஆந்திரா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இன்றைக்கும், தமிழகத்தின் மிகப் பெரிய தொழில்நிறுவனங்களின் சமூகமாக விளங்கும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.இலட்சுமணன். சோழ மண்டலத்தைச் சேர்ந்தவரான இவர், தனது உயர்நிலைப் பள்ளியை அங்குள்ள நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். கல்லூரிக் கல்வியை திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியான புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற் றார். (இந்த கல்லூரியில் படித்தவர்கள் 6 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது).
சட்டத்தின் மீதான ஆர்வம் காரணமாக சென்னை வந்து, பாரிமுனையில் உள்ள மெட்ராஸ் சட்டக்கல்லுரியில் சேர்ந்து சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
அதைத்தொடர்ந்து வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கியவர், முன்னாள் நீதிபதி ஜி. ராமானுஜம் நீதிபதி கே.வெங்கடசாமி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி போன்ற சட்ட வல்லுநர்களின் கீழ் பணியாற்றி சட்ட நுணுக்கங்களைக் கற்றார்.
1989ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தால் அரசாங்கபிளீடராக நியமிக்கப்பட்டார். இதனால், அரசு பிளிடர் பதவி பெற்ற முதல் நகரத்தார் என்ற பெருமைக்கு சொந்தக்காரனானார். அவருடைய அசாத்திய வாதத்திறமையால் பல் வழக்குகளில் வெற்றிவாகை சூடினார்.
இதையடுத்து, 1990 ல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த முதல் உயர்நீதி மன்ற நீதிபதி என்ற பெருமையும் பெற்றார்.
தொடர்ந்து, கேரளா, ராஜஸ்தான் மற்றும் ஆண்ட்ராபிரதேசம் ஆகிய நான்கு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி சாதனை படைத்தார். மேலும், 4 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றிய ஒரே நீதிபதி என்ற பெருமையையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து, அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி ஓய்வுபெற்றார்.
பொது இடங்களில் புகை பிடிக்க தடை, சபரிமலையில் பிளாஸ்டிக்கிற்கு முற்றாக தடை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். முல்லைப் பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
இவரது சிறப்பான சேவைக்கு மகுடமாக கிடைத்தது, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் பதவி. இதில் சிறப்பாக பணியாற்றி வந்தார். இதுமட்டுமின்றி மேலும் ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சார்பிக ஏ.ஆர்.லட்சுமணனுக்கு, டாக்டர் ஆஃப் லாஸ் படம் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
தமிழக கவர்னரால், ஷிரோன்மணி விகாஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
மோரிஷியஸ் நாட்டு ஜனாதிபதி, ஏ.ஆர்.லட்சுமணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிங்ததார்.
மேலும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் இந்திய தலைமை நீதிபதி டாக்டர் கே.ஜி.பாலகிருஷ் ணன், முன்னாள் மத்திய இந்திய அமைச்சர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி, பி.சிதம்பரம் உள்பட பலரிடம் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் நன்கு வாசிக்கும் மற்றும் எழுதும் திறமைக்கொண்ட நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் சிறந்த எழுத்தாளர் ஆவார். பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய ‘ஏ ஜட்ஜ் ஸ்பீக்ஸ்’ என்ற புத்தகம், அப்போதைய இந்திய ஜனாதிபதி திருமதி.பிரதிபா பாட்டீலால் வெளியிடப்பட்டது.
முன்னதாக ஏ.ஆர்.லட்சுமணன் எழுதிய, ‘பன்மலர்ச் சோலை’ நுால் வெளியீட்டு விழா கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. அப்போதைய அமைச்சர் ராம.வீரப்பன் நுாலை வெளியிட, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், தீர்ப்பு எழுதும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும் படிப்பேன். எனக்கு படிப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. வாசிப்பு எனக்கு இரண்டாவது சுவாசம் போன்றது, வாசிப்பது போலவே வாழ வேண்டும் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்தார்.
இவருக்கு ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எ ல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமை யாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவரது மகன் ஏ.ஆர்.எல்.சுந்த ரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோ சியேசன் தலைவராகவும் இருக்கிறார்.
நகரத்தார் சமூகத்தில் ஜென்டில்மேன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான நீதியரசர், ஏ.ஆர்.லட்சு மணன் இன்று இப்பூலகை விட்டு, தனது 78வயதில் மறைந்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி காலமான நிலையில், சோகத்தில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை ஏ.ஆர்.லட்சுமணன் உயிர் பிரிந்தது.