சென்னை: விவிபாட் இயந்திரம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் உள்ள 92 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த 6ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்றது.  72.8% வாக்குகள் பதிவானது.   வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில், தேர்தல் அன்று மாலை சென்னை யில் இருசக்கர வாகனத்தில்  மூன்று மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள்கொண்டு செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த எந்திரங்கள் முதலில் அங்குப் பழுதான வாக்குப்பதிவு இயந்திரம் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தது என்றும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதையடுத்து வேளச்சேரி தொகுதியில் 92 வது வாக்குச்சாவடியில் 17ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அந்த ஒரு பகுதியில் மட்டும் மீண்டும் வாக்கு சேகரிப்பில் கட்சியினர் ஈடுபட்டனர். நேற்று மாலையுடன் அங்கு, தேர்தல் பிரசாரம் முடிடைந்தது. இதையடுத்து நாளை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுவாக்குப்பதிவு நடைபெறும் 92வது வாக்குச்சாவடி ஆண் வாக்காளர்களுக்கானது என்பதால் இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்ற 548 ஆண்கள் மட்டும் தகுதி பெற்றவர்கள்.